மேலும் செய்திகள்
தள்ளாடும் அம்மா உணவகம் கண்டுகொள்ளாத நகராட்சி
21-Jul-2025
காசிமேடு,காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில், டீக்கடை மற்றும் உணவகத்தில் இரண்டு சிலிண்டர்கள் வெடித்து விபத்து ஏற்பட்டது. காசிமேடு மீன்பிடி துறைமுக வளாகத்தில், ஐக்கிய சபை மீனவர் சங்கம் அருகே, ஏழுமலை என்பவருக்கு சொந்தமான டீக்கடை உள்ளது. அதன் அருகே, உதயா என்பவரது உணவகம் செயல்படுகிறது. நேற்று முன்தினம் நள்ளிரவில், டீக்கடையில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. அப்போது, கடையினுள் இருந்த சிலிண்டர் வெடித்து சிதறிய நிலையில், அருகேயிருந்த உதயாவின் உணவகத்தின் சிலிண்டரும் வெடித்து சிதறியதால் பரபரப்பு ஏற்பட்டது. ராயபுரம் தீயணைப்பு வீரர்கள், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, தீயை அணைத்தனர். நள்ளிரவு நேரம் என்பதால், கடையில் யாரும் இல்லை. அதனால் உயிர்சேதம் தவிர்க்கப்பட்டது.
21-Jul-2025