ஆட்டம்... பாட்டம்... கொண்டாட்டம்! பரணிபுத்துார் குடியிருப்பினர் உற்சாகம்
குன்றத்துார்:'தினமலர்' நாளிதழ், அடுக்குமாடி குடியிருப்பில் உள்ளவர்களை ஒன்றிணைத்து, 'கார்னிவெல்- அப்பார்ட்மென்ட் கொண்டாட்டம்' என்ற நிகழ்ச்சியை நடத்தி வருகிறது. இதற்கு கிடைத்த பெரும் வரவேற்பை அடுத்து, சென்னையில் பல்வேறு பிரபல அடுக்குமாடி குடியிருப்புகளில், இந்த நிகழ்ச்சி கோலாகலமாக நடந்தப்படுகிறது.அந்த வரிசையில், சென்னை மவுலிவாக்கம் - மாங்காடு சாலையில், பரணிபுத்துார் பகுதியில் உள்ள டி.வி.எஸ்., 'எமரால்டு கீரின் என்கிளவ்' அடுக்குமாடி குடியிருப்பில், பிற்பகல் 2:00 மணி முதல் இரவு 9:00 மணி வரை ‛கார்னிவெல் கொண்டாட்டம்' நடந்தது.நிகழ்ச்சியை, 'கிட்டீ பட்டீ, பூர்விகா அப்ளையன்ஸ், மயில் மார்க் பூஜை, ஹோம் கேர் புரோடக்ட்ஸ், போகா ஈவென்ட், கங்காசினி, அக்ஷயகல்பா ஆர்கானிக்' ஆகிய நிறுவனங்கள் இணைந்து நடத்தின. குடியிருப்புவாசிகள் குடும்பத்துடன் உற்சாகத்துடன் பங்கேற்று மகிழ்ந்தனர்.இதில், தமிழர்களின் பாரம்பரிய விழாவான பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. குடியிருப்புவாசிகள் உற்சாகமாக கொண்டாடி மகிழ்ந்தனர். குறிப்பாக, மாட்டு வண்டியில் சிறுவர்கள் குடியிருப்பிற்குள்ளே வலம் வந்து குதுாகலித்தனர். மேலும், உறியடி, மெதுவாக சைக்கிள் ஓட்டுதல், மினி மாரத்தான், மேஜிக் ஷோ, ஆடல், பாடல் உள்ளிட்ட பல்வேறு நிகழ்வுகள் நடந்தன. இவற்றில் அனைவரும் உற்சாகமாக பங்கேற்று மகிழ்ந்தனர். வெற்றி பெற்றவர்களுக்கு, பரிசுகள் வழங்கப்பட்டன. 'தினமலர்' சந்தாதாரர்களுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன.'தினமலர்' நாளிதழ் ஒருங்கிணைத்த இந்த நிகழ்ச்சியால், எங்கள் குடியிருப்பில் வசிப்போர், ஒருவரையொருவர் சந்தித்து பேசும் வாய்ப்பு கிடைத்தது. இதனால், புதிய நண்பர்கள் கிடைத்துள்ளனர். சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை, அனைவரும் மகிழ்ச்சியடைந்தோம்.- கே.ரஞ்சித், குடியிருப்புவாசி.-பொங்கல் விழாவின்போது, சொந்த ஊரான ஆந்திராவுக்கு சென்றுவிட்டேன். இதனால், எங்கள் அடுக்குமாடி குடியிருப்பில் பொங்கல் விழா கொண்டாட முடியவில்லை. இந்த நிகழ்ச்சியில், அனைவருடன் இணைந்து, பொங்கல் கொண்டாடி மகிழ்ந்தேன்.- வி.துார்கா, குடியிருப்புவாசி.சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை, அனைவருக்கும் விளையாட்டு போட்டிகள் நடந்தப்பட்டதால் அனைவரும் மகிழ்ச்சியடைந்தோம். புத்தாண்டிற்கு பின், எங்கள் குடியிருப்பில் நடந்த இந்த பிரமாண்ட நிகழ்ச்சி, மகிழ்ச்சியை தந்தது. தொடர்ந்து இது போன்ற நிகழ்ச்சிகள் நடக்க வேண்டும்; நன்றி!- ஆர்.ஜவகர், குடியிருப்புவாசி.அடுக்குமாடி குடியிருப்பு வாழ்க்கை, ஒரு வித இயந்திரமான வாழ்க்கை. ஒருவரையொருவர் சந்தித்து பேசும் வாய்ப்பு குறைவு. 'தினமலர்' நடத்திய இந்த நிகழ்ச்சி மூலம் அனைவரும் ஒன்றாக கூடி, குடும்பத்துடன் பேசி மகிழ்ந்தது, மறக்க முடியாத நிகழ்வாக அமைந்தது.- சி.ஹேமா, குடியிருப்புவாசி.