உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / புகார் பெட்டி சித்தா மருத்துவமனை முன் வேகத்தடை அகற்றியதால் ஆபத்து

புகார் பெட்டி சித்தா மருத்துவமனை முன் வேகத்தடை அகற்றியதால் ஆபத்து

சித்தா மருத்துவமனை முன் வேகத்தடை அகற்றியதால் ஆபத்து

அரும்பாக்கத்தில், அரசினர் சித்த மருத்துவக் கல்லுாரி மற்றும் அறிஞர் அண்ணா இந்திய மருத்துவமனை இயங்கி வருகிறது. இந்த வளாகத்தில், சித்த மருத்துவ மைய ஆராய்ச்சி நிலையம் மற்றும் மருத்துவமனை புறநோயாளி பிரிவுகள் உள்ளன.அதுமட்டுமல்லாமல், ஹோமியோபதி, யோகா மற்றும் இயற்கை மருத்துவக் கல்லுாரியும் இயங்கி வருகிறது. தினமும் ஆயிரக்கணக்கான மக்கள் வந்து சிகிச்சை பெற்றுச் செல்கின்றனர். எப்போதும், போக்குவரத்து நிறைந்த சாலையில் இம்மருத்துவமனை அமைந்துள்ளதால், அப்பகுதியில் வேகத்தடை இருந்தது. இதனால் சாலையை கடந்து செல்ல வசதியாக இருந்தது.இந்த நிலையில், கடந்த மாதம் புது சாலை அமைக்கும் பணி நடந்தது. இதற்காக வேகத்தடை அகற்றப்பட்டதாக தெரிகிறது. இதனால், மருத்துவமனைக்கு செல்லும் நோயாளிகள் சாலையை கடக்க முடியாமல் தினமும் அவதிப்படுகின்றனர். எனவே, மீண்டும் வேகத்தடை அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.- சிவராமன், அரும்பாக்கம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ