உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / அண்ணா பிரதான சாலையில் வாகன ஆக்கிரமிப்பால் ஆபத்து

அண்ணா பிரதான சாலையில் வாகன ஆக்கிரமிப்பால் ஆபத்து

நெசப்பாக்கம், கோடம்பாக்கம் மண்டலம், கே.கே., நகர், அசோக் நகர், விருகம்பாக்கம், நெசப்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளை இணைக்கும் முக்கிய பேருந்து சாலையாக, அண்ணா பிரதான சாலை உள்ளது.இருவழிப் பாதையாக உள்ள இச்சாலை, 1.3 கி.மீ., நீளம் மற்றும் இருபுறம், தலா 35 அடி அகலம் உடையது. இந்நிலையில், இச்சாலையில் உள்ள மழைநீர் வடிகால் மற்றும் சாலை ஓரத்தில், வாகனங்கள் ஆக்கிரமித்து நிறுத்தப்படுகின்றன.இதனால், பாதசாரிகள் சாலையில் நடந்து செல்லும் நிலை உள்ளது. அத்துடன்,'பீக் ஹவரில்' கடும் போக்குவரத்து நெரிசலும் ஏற்படுகிறது. எம்.ஜி.ஆர்., நகர் அரசு மேல்நிலைப் பள்ளி அருகே நிறுத்தப்பட்டுள்ள லோடு வேன்களால், பள்ளிக்கு வரும் மாணவ - மாணவியர் சிரமப்படுகின்றனர். எனவே, சாலையை ஆக்கிரமித்துள்ள வாகனங்களை அகற்ற, மாநகராட்சி மற்றும் போக்குவரத்து துறை போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்து உள்ளது.

போகன் வில்லா பகுதியில்

ஆக்கிரமிப்பு கடைகளால் அவதிஅண்ணா நகர் மண்டலத்தில், கிழக்கு அண்ணா நகர் ஆறாவது அவென்யூவில், பல ஏக்கர் பரப்பில் 'போகன் வில்லா' எனும் பழமையான பூங்கா உள்ளது. அண்ணா நகர் 'டவர் பூங்கா' மற்றும் திரு.வி.க., பூங்காவை போல், போகன் வில்லா பூங்காவும் இப்பகுதியில் பிரபலமானது. இங்கு, ஸ்கேட்டிங், நடைபயிற்சி, சிறுவர்கள் விளையாட்டு திடல்கள் உள்ளன. இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த பூங்காவை சுற்றி, ஆக்கிரமிப்பு கடைகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன.இதனால், பூங்காவிற்கு வரும் பொதுமக்கள் வாகனங்களை நிறுத்த முடியாமல் தவிக்கின்றனர். நடைபாதை முழுவதும் கடைகள் போடப்பட்டுள்ளதால், பாதசாரிகள் சாலையில் நடந்து செல்ல வேண்டிய நிலை நிலவுகிறது.எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பொதுமக்கள் இடையூறு ஏற்படுத்தும் வகையில் உள்ள ஆக்கிரமிப்பு கடைகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கோரிக்கை வலுத்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி