உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / ஆக்கிரமிப்பு வாகனங்களால் ஜல்லடியன்பேட்டையில் ஆபத்து

ஆக்கிரமிப்பு வாகனங்களால் ஜல்லடியன்பேட்டையில் ஆபத்து

பள்ளிக்கரணை, பெருங்குடி மண்டலம், வார்டு -190க்கு உட்பட்டது ஜல்லடியன்பேட்டை. இங்கு, வேளச்சேரி- - தாம்பரம் பிரதான சாலையில், தனியார் வணிக வளாகம் அமைந்துள்ளது.இவ்வளாகத்திற்கு வரும் வாடிக்கையாளர்கள், அணுகு சாலையை ஆக்கிரமித்து, கார், இருசக்கர வாகனங்களை நிறுத்துவதால், போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதோடு விபத்து அபாயமும் உள்ளது.அங்கு, அரசு பேருந்துகள் நிற்க, தடுப்பு அமைத்து பேருந்து நிறுத்தம் உள்ளது. ஆனால், சாலை ஆக்கிரமிப்பு வாகனங்களால், பேருந்துகள் நிறுத்தத்திற்கு செல்ல வழியில்லாமல் சாலையின் நடுவிலேயே நின்று, பயணியரை ஏற்றி, இறக்கி செல்கின்றன.இதனால், பயணியர் மிகுந்த அவதிப்படுகின்றனர். தவிர, பேருந்து நிறுத்தத்தம் ஆட்டோ நிறுத்துமிடமாகவும், நடைப்பாதை கடைகளாகவும் உள்ளது.அரசு பேருந்துகள் சாலையின் நடுவில் நிற்பதால், ஜல்லடியன்பேட்டை ரைஸ் மில் சாலையில் இருந்து வரும் வாகன ஓட்டிகளால், பேருந்தை முந்தி வரும் வாகனங்களை கவனிக்க முடிவதில்லை.இதனால், குறிப்பிட்ட சாலையில் இருந்து வரும் வாகனங்களால், மேடவாக்கம் மேம்பாலத்தை பயன்படுத்துவதில் சிரமம் ஏற்பட்டு, அடிக்கடி விபத்துகள் ஏற்படுகின்றன.எனவே, பெரும் விபத்து ஏற்படும் முன், சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள், சாலை ஆக்கிரமிப்பை அகற்றி, அரசு பேருந்துகள் உரிய இடத்தில் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் வலியுறுத்தியுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை