உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / கேபிள் பதிக்க தோண்டிய பள்ளத்தால் விபத்து அபாயம்

கேபிள் பதிக்க தோண்டிய பள்ளத்தால் விபத்து அபாயம்

போரூர்:போரூர் ஆற்காடு சாலையில், மின் வாரியம் கேபிள் பதிக்க தோண்டிய பள்ளத்தால் விபத்துக்கள் ஏற்படும் அபாயம் உள்ளது. போரூர், வளசரவாக்கம், வடபழனி, கோடம்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளை, ஆற்காடு சாலை இணைக்கிறது. போரூர் - கோடம்பாக்கம் ஆற்காடு சாலையில், இரும்பு தடுப்புகள் வைத்து, மெட்ரோ ரயில் பணிகள் நடந்து வருகின்றன. இதனால் சாலை குறுகலாகி நெரிசல் ஏற்பட்டு வருகிறது. தவிர, மெட்ரோ ரயில் பணிக்காக போரூர் சந்திப்பில் இருந்து ஆலப்பாக்கம் சந்திப்பு வரை, மின் வாரியம் சார்பில் கேபிள் பதிக்க, பள்ளங்கள் தோண்டப்பட்டு உள்ளன. இப்பள்ளங்களைச் சுற்றி வைக்கப்பட்டுள்ள தடுப்புகள், அதனுள்ளே விழுந்து கிடக்கின்றன. இதனால், இருசக்கர வாகன ஓட்டிகள் மற்றும் பாதசாரிகள், பள்ளத்தில் தடுமாறி விழும் நிலை உள்ளது. இரு நாட்களுக்கு முன், இருசக்கர வாகனத்தில் வந்த நபர், இப்பள்ளத்தில் தடுமாறி விழுந்ததில் காயமடைந்து, தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். எனவே, ஆற்காடு சாலையில் மின் வாரியம் சார்பில் தோண்டப்பட்ட பள்ளத்தை முறையாக மூடுவதுடன், பணிகள் நடக்கும் பகுதியில் தடுப்புகள் அமைக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ