உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / வடிவுடையம்மன் கோவிலில் சங்கர பாரதி மஹா சுவாமி தரிசனம்

வடிவுடையம்மன் கோவிலில் சங்கர பாரதி மஹா சுவாமி தரிசனம்

திருவொற்றியூர் கர்நாடக மாநிலம், யடதோர் - யோகனேஸ்வர சரஸ்வதி மடத்தின் சங்கர பாரதி மஹா சுவாமிகள், நேற்று காலை, திருவொற்றியூர், தியாகராஜ சுவாமி உடனுறை வடிவுடையம்மன் கோவிலில், சுவாமி தரிசனம் செய்தார்.அதன்படி, தியாகராஜர் சன்னதி, ஆதிபுரிஸ்வரர், வட்டப்பாறையம்மன், திருவொற்றீஸ்வரர், வடிவுடையம்மன் மற்றும் பைரவர் சன்னதிகளில் சுவாமி தரிசனம் செய்தார். பின், கோவிலினுள் உள்ள பிரம்ம தீர்த்த குளத்தில் இறங்கி, கலசத்தில் தீர்த்தம் எடுத்து தெளித்துக் கொண்டார். பின், வசந்த மண்டபத்தில் அமர்ந்து, கோவிலுக்கு வந்திருந்த பக்தர்களுக்கு அருளாசி வழங்கி, பழ பிரசாதங்களை வழங்கினார். தொடர்ந்து, கோவில் நிர்வாகம் தரப்பில், சுவாமிகளுக்கு மரியாதை செய்யப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி