உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / தனியார் நிறுவன வளாகத்தில் மின்சாரம் பாய்ந்து பலி?

தனியார் நிறுவன வளாகத்தில் மின்சாரம் பாய்ந்து பலி?

ஆவடி, ஆவடி, பருத்திப்பட்டு, வி.ஜி.என்., தனியார் குடியிருப்பைச் சேர்ந்தவர் மனோஜ், 38; தனியார் நிறுவன மேலாளர்.நேற்று காலை 8:30 மணிக்கு, அவரது நிறுவனத்தில் மயில் ஒன்று இறந்து கிடப்பதாக, காவலாளி தகவல் தெரிவித்துள்ளார்.இது குறித்து, வனத்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த வேளச்சேரி வேட்டை தடுப்பு போலீசார், இறந்த பெண் மயிலை கைப்பற்றி, வேளச்சேரி வனத்துறை அலுவலகத்திற்கு எடுத்து சென்றார்.அங்கு பிரேத பரிசோதனைக்கு செய்த பின், மயில் நல்லடக்கம் செய்யப்படும் என, வனத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.முதற்கட்ட விசாரணையில், குடியிருப்பில் உள்ள மின்மாற்றியில் உரசிய போது, மின்சாரம் பாய்ந்து துாக்கி வீசப்பட்டு மயில் இறந்திருக்கலாம் என, கூறப்படுகிறது. ஆவடி போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை