சூளைமேடு ஏட்டு மாரடைப்பால் மரணம்
அரும்பாக்கம், அரும்பாக்கம், எம்.எம்.டி.ஏ., காலனி, பசும்பொன் தெருவைச் சேர்ந்தவர் எட்டியப்பன், 45. இவர், சூளைமேடு சட்டம் - ஒழுங்கு பிரிவு ஏட்டுவாக பணிபுரிந்தார்.நேற்று முன்தினம் இரவு, 11:00 மணிக்கு, பணி முடிந்து வீடு திரும்பினார். வீட்டில் இருக்கும் போது, திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டு மயங்கியுள்ளார்.அவரது மனைவி ரேகா, அவரை மீட்டு, அண்ணா நகரில்உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தபோது, அங்கு போதிய வசதி இல்லை என தெரிவித்துள்ளனர்.இதையடுத்து அவரை, ஆழ்வார்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில் பரிசோதித்தபோது, வழியில் இறந்ததாக, மருத்துவர்கள் தெரிவித்தனர். ஏட்டு இறப்பு உடல் ரீதியான காரணமா, பணிச்சுமையா என, போலீசார் விசாரிக்கின்றனர்.