டெப் எனேபிள் பவுண்டேஷன் 16ம் ஆண்டு விழா
சென்னை: டெப் எனேபிள் பவுண்டேஷனின் 16ம் ஆண்டு விழா மற் றும் 'ஹெலன் கெல்லர்' விருது வழங்கும் விழா, சேத்துப்பட்டு, மெட்ராஸ் கிறிஸ்தவக் கல்லுாரி மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் நே ற்று முன்தினம் நடந்தது. இதில், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை ஆணையர் லட்சுமி மற்றும் அரைஸ் இன்வெஸ்ட்மென்ட்ஸ் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர், டெ ய்ஸி ஆதவ் அர்ஜூனா ஆகியோர், சிறப்பு விருந்தினர்க ளாக பங்கேற்றனர். நிகழ்ச்சியில், 300க்கும் மேற்பட்ட காது கேளாத மாணவர்கள், இளைஞர்கள், தன்னார்வலர்கள் பங்கேற்றனர். டெப் எனேபிள் பவுண்டேஷன் சார்பில், காது கேளாதோரை சமூக ரீதியாக மு ன்னேற்றும் வகையில், பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொள்கிறது. அதன் ஒரு பகுதியாக, கல்வியில் அதிக மதிப்பெண் பெறும் காது கேளாத மாணவர்கள் மற்றும் கல்விப் பணியில் சிறப்பாக பணியாற்றும் ஆசிரியர்களுக்கு, 'ஹெலன் கெல்லர்' விருது வழங்கப்படுகிறது. இந்நிலையில் கடந்தாண்டு, பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற, எட்டு மாணவ - மாணவியர்; 11 ஆசிரியர்கள் மற்றும் ஐந்து தன்னார்வலர்கள் ஆகியோரு க்கு, 'ஹெல்லன் கெல்லர்' விருது வழங்கப்ப ட்டது.