உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / சென்னை புறநகர் மின்சார ரயில்களில் தானியங்கி கதவுகள் அமைக்க முடிவு

சென்னை புறநகர் மின்சார ரயில்களில் தானியங்கி கதவுகள் அமைக்க முடிவு

சென்னை, மும்பையை தொடர்ந்து, சென்னை புறநகர் மின்சார ரயில்களிலும் தானியங்கி கதவுகள் பொருத்த ரயில்வே அமைச்சகம் முடிவு செய்துள்ளது.மும்பை புறநகர் மின்சார ரயிலில் நேற்று முன்தினம் கூட்ட நெரிசல், படியில் தொங்கியபடி பயணம் செய்து தவறி விழுந்ததில் நான்கு பேர் உயிரிழந்தனர். இந்த விபத்து குறித்து, ரயில்வே ஆலோசனை மேற்கொண்டு வருகிறது. இதற்கிடையே, ரயில்வே அதிகாரிகளுடன் ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் நடத்திய ஆலோசனை கூட்டத்தில், புறநகர் ரயில்களில் தானியங்கி கதவுகள் அமைக்கவும், நெரிசல் மிகுந்த நேரத்தில் கூடுதல் மின்சார ரயில்கள் இயக்குவற்கும் முடிவு செய்யப்பட்டுள்ளது.இது குறித்து, ரயில்வே அதிகாரிகள் கூறியதாவது: மும்பையை அடுத்து சென்னையில் தான் அதிகளவில் மின்சார ரயில்கள் இயக்கப்படுகின்றன. தினமும் பல லட்சக்கணக்கானோர் பயணம் செய்கின்றனர். அலுவலக நேரங்களில் 10 நிமிடங்கள் ரயில்கள் தாமதம் ஏற்பட்டாலும், மின்சார ரயில்களில் பெரிய அளவில் நெரிசல் ஏற்படுகிறது. எனவே, பீக் ஹவர்களில் கூடுதல் மின்சார ரயில்கள் இயக்கவும், படிகளில் தொங்கியபடி பயணத்தை தடுப்பது குறித்தும் ஆலோசிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, மின்சார ரயில்களில் தானியங்கி கதவுகளை பொருத்தி இயக்குவது குறித்து பேசப்பட்டது.'ஏசி' மின்சார ரயிலில் ஏற்கனவே தானியங்கி கதவுகள் இருப்பதால், வழக்கமாக மின்சார ரயிலிலும் தானியங்கி கதவுகள் பொருத்தி இயக்குவதில் பெரிய சிரமம் இருக்காது. இருப்பினும், ரயில் பெட்டியின் உட்பகுதிகளில், நல்ல காற்றோற்ற வசதி இருக்க போதிய வசதிகள் ஏற்படுத்த வேண்டும். இது குறித்து, தொழில்நுட்ப குழுவினருடன் ஆலோசனை நடத்தி முடிவெடுக்கப்படும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி