உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / சாதாரண கட்டணத்தில் பயணிக்க 200 சொகுசு பஸ் இயக்க முடிவு

சாதாரண கட்டணத்தில் பயணிக்க 200 சொகுசு பஸ் இயக்க முடிவு

சென்னை வெள்ளை நிற பேருந்துகளுக்கான தேவை அதிகரித்துள்ளதால், சிவப்பு நிறத்தில் இயக்கப்படும் 200 சொகுசு பேருந்துகளை, சாதாரண கட்டணத்தில் இயக்க, மாநகர போக்குவரத்து கழக அதிகாரிகள் முடிவு செய்து உள்ளனர். சென்னை மாநகர போக் கு வரத்து கழகத்தில், பழைய பேருந்துகள் நீக்கப்பட்டு, புதிய பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. 55 'ஏசி' மின்சார பேருந்துகள் உட்பட 255 தாழ்தள மின்சார பேருந்துகள், பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டுள்ளன. இந்நிலையில், பெண்களுக்காக இயக்கப்படும் வெள்ளை நிற இலவச பேருந்துகளில் பயணிப்போரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதால், சிவப்பு நிற சொகுசு பேருந்துகளை கூடுதலாக இயக்க, மாநகர போக்குவரத்து கழக அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர். இது குறித்து, அதிகாரிகள் கூறியதாவது: மாநகர போக்குவரத்து கழகத்தில், 500க்கும் மேற்பட்ட பழைய பேருந்துகளை நீக்கி உள்ளோம். ஓராண்டில், புதிய தாழ்தள பேருந்துகள், மின்சார பேருந்துகளை இணைத்துள்ளோம். இதனால், மாநகர பேருந்துகளின் எண்ணிக்கை, 3,400 ஆக உயர்ந்துள்ளது. சாதாரண கட்டணத்தில் 1,718 பேருந்துகளையும், சொகுசு கட்டணத்தில் 1,299 பேருந்துகளையும் இயக்கி வருகிறோம். பெண்களுக்காக இயக்கப்படும் இலவச பேருந்துகளில் பயணிப்போரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. அதனால், சாதாரண கட்டண பேருந்துகளை கூடுதலாக்கி வருகிறோம். அதற்காக, சிவப்பு நிறத்தில் இயக்கப்படும் 200 சொகுசு பேருந்துகளை சாதாரண கட்டணத்தில் இயக்க உள்ளோம். இவ்வாறு அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ