உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / திருவண்ணாமலைக்கு 2,100 பஸ்கள் சித்ரா பவுர்ணமிக்காக இயக்க முடிவு

திருவண்ணாமலைக்கு 2,100 பஸ்கள் சித்ரா பவுர்ணமிக்காக இயக்க முடிவு

சென்னை:சித்ரா பவுர்ணமியை ஒட்டி, சென்னை உட்பட பல்வேறு மாவட்டங்களில் இருந்து, அரசு போக்குவரத்து கழகங்கள் சார்பில், திருவண்ணாமலைக்கு, 2,100 சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளன.திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவிலில், ஒவ்வொரு மாதமும் பவுர்ணமி அன்றும், பக்தர்கள் கிரிவலம் செல்வர். அதுவும், சித்திரை மாத பவுர்ணமி, மற்ற பவுர்ணமிகளை விட விசேஷமானது. அன்று தமிழகத்தின் பல்வேறு இடங்களில் இருந்தும் தி.மலைக்கு, பல லட்சக்கணக்கானோர் செல்வர். வரும் 11ம் தேதி இரவு, 8:01 மணிக்கு சித்ரா பவுர்ணமி துவங்கி, மறுநாள் இரவு, 10:25 மணி வரை உள்ளது. எனவே, பொதுமக்கள் வசதிக்காக, சென்னை உட்பட பல்வேறு மாவட்டங்களில் இருந்து, 2,100க்கும் மேற்பட்ட சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளன.இது குறித்து, அரசு போக்குவரத்து கழக அதிகாரிகள் கூறியதாவது: சித்ரா பவுர்ணமியை முன்னிட்டு, சென்னை, விழுப்புரம், காஞ்சிபுரம், வேலுார், புதுச்சேரி, திருச்சி, கள்ளக்குறிச்சி, கடலுார், சேலம், கோவை, விருத்தாசலம், கும்பகோணம், தர்மபுரி உட்பட பல்வேறு நகரங்களில் இருந்து, வழக்கமாக இயக்கப்படும் பஸ்களோடு, 2,100க்கும் அதிகமான சிறப்பு பஸ்கள், திருவண்ணாமலைக்கு இயக்கப்பட உள்ளன.வரும் 10ம் தேதி இரவு முதல், 12ம் தேதி வரை சிறப்பு பஸ்கள் இயக்கப்படும். கடந்த ஆண்டை விட, இந்த ஆண்டு அதிக மக்கள் வருவர் என்று எதிர்பார்க்கிறோம். எனவே, போதிய அளவில் பஸ்களை இயக்க, அனைத்து மண்டலங்கள் மற்றும் கிளை மேலாளர்களுக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது. அதுபோல, பஸ்களை சீராக இயக்க, முக்கிய பஸ் நிலையங்களில், சிறப்பு அலுவலர்களை நியமனம் செய்யவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. திருவண்ணாமலையில் பஸ்களை பிரித்து இயக்க, போதிய இடவசதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அரசு விரைவு பஸ்களில் டிக்கெட் முன்பதிவு செய்து பயணிக்கலாம். இவ்வாறு அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ