உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / காவலாளியை தாக்கிய டெலிவரி ஊழியர் கைது

காவலாளியை தாக்கிய டெலிவரி ஊழியர் கைது

கே.கே., நகர்: நெசப்பாக்கத்தைச் சேர்ந்த வேல்முருகன், 47, மேற்கு மாம்பலம், வேம்புலியம்மன் கோவில் தெருவில், ஒரு அடுக்குமாடி குடியிருப்பின் காவலாளி. நேற்று காலை, காய்கறி மற்றும் பால் பாக்கெட்டுகளை டெலிவரி செய்ய, அடுக்குமாடி குடியிருப்புக்கு 'சொமாட்டோ' ஊழியர் தினேஷ், 24, வந்தார். அங்கு, வாகன நிறுத்துமிடம் பகுதியில் இருசக்கர வாகனத்தை நிறுத்தும்படி வேல்முருகன் அறிவுறுத்தினார். ஆனால் ஊழியர், அதை மீறி உள்ளே சென்றதால் இருவருக்கும் தகராறு ஏற்பட்டது. இதில் கீழே விழுந்த வேல்முருகனின் தலையில் காயம் ஏற்பட்டது. கே.கே., நகர் போலீசார், தினேஷை கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ