உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / ஐ.டி., பெண் ஊழியரிடம் அத்துமீற முயன்ற டெலிவரி ஊழியருக்கு காப்பு

ஐ.டி., பெண் ஊழியரிடம் அத்துமீற முயன்ற டெலிவரி ஊழியருக்கு காப்பு

மடிப்பாக்கம், மடிப்பாக்கம் பகுதியில், வாடகை வீட்டில் வசித்து வரும் 27 வயது ஐ.டி., பெண் ஊழியர், இரு மாதங்களுக்கு முன், 'செப்டோ' டெலிவரி நிறுவனத்தில் மளிகை பொருட்களை 'ஆர்டர்' செய்துள்ளார்.பொருட்களை டெலிவரி செய்ய வந்த நபர், 'மொபைல் போனில் சார்ஜ் இல்லை; உங்களுடைய வீட்டில் சார்ஜ் போட்டுக்கலாமா' எனக் கேட்டுள்ளார்.அப்பெண் சம்மதிக்க, திடீரென்று அந்த வாலிபர் வீட்டிற்குள் நுழைந்துள்ளார். 'சமையலுக்கு உதவி ஏதாவது செய்ய வேண்டுமா? சொல்லுங்கள்; நான் செய்து தருகிறேன்' என்றுள்ளார்.இதனால், சந்தேகமடைந்த அப்பெண், அவரது மொபைல் போனை பார்த்ததில், சார்ஜ் இருப்பது தெரிய வந்தது. இதையடுத்து, வீட்டை விட்டு வெளியேறும்படி கூறியுள்ளார். ஆனால், அவர் வெளியேறாமல் அப்பெண்ணிடம் ஆபாசமாக பேசியுள்ளார்.இது குறித்து, அப்பெண் அந்நபரின் மீது டெலிவரி நிறுவனத்திடம் புகார் அளித்துள்ளார்.இந்நிலையில், கடந்த 13ம் தேதி மதியம், அப்பெண் ஆன்லைனில் பொருட்கள் 'ஆர்டர்' செய்துள்ளார். டெலிவரி செய்ய அதே நபர் வரவே, கோபமடைந்த அப்பெண் டெலிவரி நிறுவனம் அவர் மீது நடவடிக்கை எடுக்காததால், மடிப்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.போலீசாரின் விசாரணையில், மயிலாடுதுறையைச் சேர்ந்த கோபிநாத், 28, என்பது தெரிய வந்தது. அவரை நேற்று முன்தினம், பெண்கள் வன்கொடுமை சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை