உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / மெட்ரோ ரயில் பணிக்காக கட்டடங்கள் இடிப்பு

மெட்ரோ ரயில் பணிக்காக கட்டடங்கள் இடிப்பு

சென்னை, மெட்ரோ ரயில் இரண்டாவது வழித்தடமான மாதவரம் - சிறுசேரி வழியில், பணிகள் நடக்கின்றன. இத்தடத்தில் ராயப்பேட்டை ஒயிட்ஸ் சாலையில், சுரங்கப்பாதை மற்றும் நிலையம் அமைக்கப்பட உள்ளன.இதற்காக, ஏற்கனவே கையகப்படுத்தப்பட்ட இடங்களில் உள்ள தேவையற்ற ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணிகள் நேற்று துவங்கின. 30க்கும் மேற்பட்ட ஊழியர்கள் ஜே.சி.பி., வாகனங்களை பயன்படுத்தி, அக்கட்டடங்களை இடித்து அகற்றி வருகின்றனர்.முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அப்பகுதியில், 50க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் அமர்த்தப்பட்டு உள்ளனர். மெட்ரோ ரயில்வே அதிகாரி கூறியதாவது:சென்ட்ரல் மெட்ரோ ரயில் நிலையத்தில் இருப்பதுபோல், ஆயிரம் விளக்கு மெட்ரோ ரயில் நிலையம் அருகே உள்ள ஒயிட்ஸ் சாலையின் கீழ் 150 மீட்டர் நீளத்தில், 22 மீட்டர் அகலத்தில் பிரமாண்டமாக மெட்ரோ ரயில் நிலையம் அமைப்பதற்கான பணி நடந்து வருகிறது. மூன்று மின் துாக்கிகள், 24 நகரும் படிகட்டுகள் அமைக்கப்பட உள்ளன.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை