பாலியல் குற்றச்சாட்டு பல் டாக்டர் சஸ்பெண்ட்
சென்னை :சென்னை அரசு பல் மருத்துவ கல்லுாரியில், வாய் நோய் குறியியல் துறை தலைவராகவும், பேராசிரியராகவும் இருந்தவர் டாக்டர் ஐ.பொன்னையா.இவர் மீது முதுநிலை மருத்துவ மாணவியர் மற்றும் துறை சார்ந்த பெண் ஊழியர்கள், பாலியல் குற்றசாட்டுகளை முன்வைத்தனர்.இது தொடர்பாக குழு அமைத்து விசாரணை நடத்தப்பட்டது. அதன்படி, பேராசிரியர் மீது ஒழுங்கு நடவடிக்கையாக பணியிடை நீக்கம் செய்து, மக்கள் நல்வாழ்வு துறை செயலர் செந்தில்குமார் உத்தரவு பிறப்பித்துள்ளார்.இந்த உத்தரவை உடனடியாக செயல்படுத்தி பொன்னையாவை பணியில் இருந்து விடுவிக்குமாறு, மருத்துவ கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்குனர் சங்குமணி அறிவுறுத்தி உள்ளார்.இதற்கிடையே, பல் மருத்துவ கல்லுாரியில், மாநில மகளிர் உரிமை ஆணையத்தினர் நேற்று, இரண்டு மணி நேரம் விசாரணை நடத்தினர்.குறிப்பாக, மருத்துவ மாணவியர் புகார் அளிக்க புகார் பெட்டி, உடனடி விசாரணை நடத்தி நடவடிக்கை எடுப்பது உள்ளிட்டவை குறித்து, ஆணைய உறுப்பினர்கள், மருத்துவ கல்லுாரி நிர்வாகத்திற்கு அறிவுறுத்தி உள்ளனர்.