உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / முதல்வர் சிறு விளையாட்டரங்கம் துணை முதல்வர் திறந்து வைப்பு

முதல்வர் சிறு விளையாட்டரங்கம் துணை முதல்வர் திறந்து வைப்பு

சென்னை:சென்னை, சேப்பாக்கம் - திருவில்லிக்கேணி தொகுதி, காயிதே மில்லத் கல்லுாரி அருகில் புதிதாக கட்டபட்டுள்ள, முதல்வர் சிறு விளையாட்டு அரங்கை, துணை முதல்வர் உதயநிதி, நேற்று திறந்து வைத்தார்.புதிதாக கட்டப்பட்டுள்ள சிறுவிளையாட்டு அரங்கில், குளிரூட்டப்பட்ட நவீன உடற்பயிற்சி கூடம், பார்வையாளர் இருக்கை வசதியுடன் கூடிய, ஹாக்கி மைதானம், இரண்டு செயற்கை புல் கிரிக்கெட் பயிற்சி மைதானம் ஆகியவை உள்ளன. இந்த அரங்கம், 4.030 ஏக்கர் பரப்பளவில், மூன்று கோடி ரூபாய் செலவில் அமைக்கப்பட்டுள்ளது. இந்த அரங்கில் அமைக்கப்பட்ட, நவீன 'ஏசி' உடற்பயிற்சி கூடத்தில், ஆண்டுக்கு 9,000 ரூபாய், மாத கட்டணமாக 1,000 ரூபாய் வசூலிக்கப்பட உள்ளது.அப்போது, துணை முதல்வர் உயதநிதி அளித்த பேட்டி:சேப்பாக்கம் - திருவல்லிகேணி சட்டசபை தொகுதியில், மூன்று கோடி ரூபாயில், சிறு விளையாட்டு அரங்கம் கட்டப்பட்டுள்ளது. இதற்கு, எம்.எல்.ஏ.,தங்கள் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து, 50 லட்சம் ரூபாய் ஒதுக்கினர். மீதமுள்ள, 2.50 கோடி ரூபாயை, விளையாட்டுத்துறை வழங்கி உள்ளது. மேலும், 22 மினி அரங்குகள் கட்ட அறிவிப்பு வெளியிட்டு, ஒன்பது மினி அரங்கம் கட்டும் பணிகள் நடந்து வருகின்றன. மீதமுள்ள அரங்கங்கள் கட்டும் பணி, விரைவில் துவங்க உள்ளது. இந்த ஆண்டு பட்ஜெட்டில், 25 மினி அரங்கம் கட்ட அறிவிப்பு வெளியாகும். இவ்வாறு, அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி