உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / திடீரென பின்னால் வந்த ரோடு ரோலர் சக்கரத்தில் சிக்கி மாற்றத்திறனாளி பலி - படம் வேண்டாம்

திடீரென பின்னால் வந்த ரோடு ரோலர் சக்கரத்தில் சிக்கி மாற்றத்திறனாளி பலி - படம் வேண்டாம்

கோயம்பேடு, சாலை போடுவதற்காக இயக்கப்பட்ட 'ரோடு ரோலர்' வாகனம், திடீரென பின்னால் வந்ததால், அதன் சக்கரத்தில் சிக்கிய மாற்றுத்திறனாளி நபர், மனைவி கண் முன் பரிதாபமாக பலியானார். கோயம்பேடு, பிள்ளையார் கோவில் தெருவைச் சேர்ந்தவர் பாஸ்கர் ராஜ், 55; மாற்றுத்திறனாளி. இவர், மனைவி சாந்தலட்சுமியுடன், அதே பகுதி விநாயகர் கோவில் அருகில், மனைவியுடன் நின்று நேற்று மாலை பேசிக் கொண்டிருந்தார். அப்போது, அவர்களுக்கு முன்னால், சாலை அமைக்கும் பணியில் 'ரோடு ரோலர்' வாகனம் ஈடுபடுத்தப்பட்டது. வாகனத்தில் திடீரென இயந்திர கோளாறு ஏற்பட்டதால், முன்னால் செல்ல வேண்டிய ரோடு ரோலம் வாகனம் பின்னால் வந்ததில், அதன் சக்கரத்தின் அடியில் சிக்கிய பாஸ்கர்ராஜ், மனைவியின் கண்முன்னே துடித்துடித்து மயங்கினார். அங்கிருந்தோர் உதவியுடன் அவரை மீட்டு, அதேபகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தபோது, பரிசோத்த மருத்துவர், வரும்வழியில் அவர் இறந்துவிட்டதாக தெரிவித்தார். கோயம்பேடு போலீசார், உடலை மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், அதேபகுதியில் உள்ள குறுங்காலீசுவரர் கோவில் தேர் வெள்ளோட்டத்தை முன்னிட்டு, சென்னை மாநகராட்சி சார்பில், ஒப்பந்த அடிப்படையில் சாலை சீரமைக்கும் பணி நடந்து வருவது தெரிந்தது. வலது காலில் லேசாக ஊனமுற்ற பாஸ்கர் ராஜ், உடனடியாக நகர்ந்து செல்ல முடியாமல் விபத்தில் சிக்கியதும் தெரிந்தது. விபத்து ஏற்படுத்திய தப்பியோடிய ரோடு ரோலர் வாகனம் ஓட்டுநரான, திருவண்ணாமலையைச் சேர்ந்த வெங்கடேசனை, போலீசார் தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி