உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / மாற்று திறனாளிகள் சங்கத்தினர் அரசு துறை செயலரிடம் மனு

மாற்று திறனாளிகள் சங்கத்தினர் அரசு துறை செயலரிடம் மனு

சென்னை, அனைத்து வகை மாற்று திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தின் மாநில தலைவர் வில்சன், பொதுச் செயலர் ஜான்சிராணி ஆகியோர், தலைமை செயலகத்தில் மாற்று திறனாளிகள் துறை அரசு செயலர் சிஜி தாமஸ் வைத்தியனை நேற்று சந்தித்து, கோரிக்கைகள் அடங்கிய மனுவை அளித்தனர்.சங்கத்தினர் கூறியதாவது:தமிழகத்தில் ஒரு அரசு நிறுவனத்தை தவிர, 300 சிறப்பு பள்ளிகள், இல்லங்கள், தொண்டு நிறுவனங்கள் பெயரில் தனியார் நடத்துகின்றன.இவற்றில், பல நிறுவனங்களுக்கு சிறப்பாசிரியர் ஊதிய உதவி, உணவூட்டு செலவு உள்ளிட்ட நிதி உதவிகளை அரசு அளித்து வருகிறது.அரசு உதவியை பெற்றும் பல பள்ளிகளில், ஆயிரக்கணக்கில் கட்டணம் வசூலிக்கின்றனர். இதை தடுக்க வேண்டும்.இப்பள்ளியில் கட்டணம் இல்லை என்ற அறிவிப்பு பலகை, அனைவருக்கும் தெரியும் வகையில் வைக்க உத்தரவிட வேண்டும். சிறப்பு பள்ளிகளில் சிறப்பாசிரியர், ஊழியர்களுக்கு, அரசு வழங்கும் மாத ஊதிய உதவியையும் நேரடியாக வழங்க வேண்டும். மூடப்படும் பள்ளிகளை அரசே ஏற்று நடத்த வேண்டும்.பொதுப்பள்ளிகளில், ஊராட்சிக்கு, 90 மன வளர்ச்சி குன்றிய குழந்தைகளுக்கான சிறப்பாசிரியர் நியமித்து, அரசே சிறப்புக்கல்வியை பொறுப்பேற்று செயல்படுத்த வேண்டும்.இவ்வாறு கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ