மாற்றுத்திறனாளி ஆசிரியர்கள் போராட்டம்
சென்னை, தமிழகத்தில், கலைப்பாட மாற்றுத்திறனாளி ஆசிரியர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில், அரசாணை எண்: 151 வெளியிடப்பட்டது.நான்கு ஆண்டுகளுக்கு மேலாகியும், இந்த அரசாணையை நடைமுறைக்கு கொண்டு வரவில்லை. இதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், அரசாணையை நடைமுறை கொண்டுவர வலியுறுத்தியும், பகுதி நேர கலைப்பாட மாற்றுத்திறனாளி ஆசிரியர்கள் முன்னேற்ற சங்கம் சார்பில், நேற்று, சென்னை மாற்றுத்திறனாளிகள் நல கமிஷனர் அலுவலகம் வாசலில் அமர்ந்து, கருப்பு சட்டை அணிந்து போராட்டம் நடத்தினர். அதேபோல், ஆசிரியர்கள் கருப்பு சட்டை அணிந்து பணிபுரிந்தனர். பின், அவர்கள் கோரிக்கை அடங்கிய மனுவை, கமிஷனரிடம் கொடுத்து விட்டு சென்றனர்.