உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / சி.என்.ஜி., லாரிகளுக்கு அனுமதி அரசுக்கு டிட்கோ கடிதம்

சி.என்.ஜி., லாரிகளுக்கு அனுமதி அரசுக்கு டிட்கோ கடிதம்

சென்னை, சி.என்.ஜி., எரிவாயு லாரிகளை தடையின்றி அனுமதிக்க வேண்டுமென, தமிழக அரசிற்கு, 'டிட்கோ' நிறுவனம் கடிதம் எழுதியுள்ளது. எண்ணுாரில், இந்தியன் ஆயில் நிறுவனத்தின் எல்.என்.ஜி., எனப்படும் திரவநிலை இயற்கை எரிவாயு முனையம் உள்ளது. அங்கிருந்து, சென்னை, திருவள்ளூர் மாவட்டங்களுக்கு, இயற்கை எரிவாயு வினியோகம் செய்யும் பணியை, 'டோரண்ட்' நிறுவனம் மேற்கொள்கிறது. இந்நிறுவனம் தினமும், 150 லாரிகளில் சி.என்.ஜி., எரிவாயுவை ஏற்றி, 77 மையங்களுக்கு எடுத்து சென்று வினியோகம் செய்கிறது. அங்கிருந்து வாகனங்களுக்கு வினியோகம் செய்யப்படுகிறது. சென்னையில் காலை, 8:00 மணி முதல் பகல், 12:00 வரையும், மாலையில், 4:00 மணி முதல் இரவு, 9:00 வரையும் லாரிகள் செல்ல போக்குவரத்து போலீசார் தடை விதித்துள்ளனர். இதனால், லாரிகள் செல்ல முடியாமல் சி.என்.ஜி.,க்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. 'இதை நிவர்த்தி செய்ய சி.என்.ஜி., எடுத்து செல்லும் லாரிகளை, தடையின்றி போக்குவரத்து போலீசார் அனுமதி அளிக்க, உள்துறையை அறிவுறுத்தவும்' என, அரசுக்கு, 'டிட்கோ' கடிதம் எழுதியுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை