உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / பெங்களூருக்கு தீபாவளி சிறப்பு ரயில்

பெங்களூருக்கு தீபாவளி சிறப்பு ரயில்

சென்னை, தீபாவளி பண்டிகையொட்டி, சென்னை சென்ட்ரல் - கர்நாடக மாநிலம் கே.எஸ்.ஆர்., பெங்களூரு இடையே, சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளது.  கே.எஸ்.ஆர்., பெங்களூரில் இருந்து, வரும் 18, 21, 25ம் தேதிகளில், காலை 8:05 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில், அதே நாளில் மதியம் 2:45 மணிக்கு சென்னை சென்ட்ரல் வரும்.  சென்ட்ரலில் இருந்து, வரும் 18, 21, 25ம் தேதிகளில் மாலை 4:30 மணிக்கு புறப்பட்டு, அதே நாளில் இரவு 10:45 மணிக்கு கே.எஸ்.ஆர்., பெங்களூரு செல்லும். இன்று காலை 8:00 மணிக்கு முன்பதிவு துவங்கும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை