உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / தீபாவளி சீட்டு, தங்க காசு மோசடி பெண் உட்பட இருவர் மீது புகார்

தீபாவளி சீட்டு, தங்க காசு மோசடி பெண் உட்பட இருவர் மீது புகார்

திரு.வி.க.நகர், கொடுங்கையூரைச் சேர்ந்தவர் சசிகலா, 36. இவர், தீபாவளி சீட்டு மோசடி தொடர்பாக, திரு.வி.க., நகர் போலீசில் புகார் அளித்துள்ளார்.புகாரில், அவர் கூறியிருப்பதாவது: எங்கள் பகுதியைச் சேர்ந்த, 60க்கும் மேற்பட்டோர், கொளத்துார், வெற்றி நகரைச் சேர்ந்த விக்னேஷ்வரன், ஜெயந்தி ஆகியோரிடம், தீபாவளி சீட்டு கட்டினோம். நகை சீட்டு மாதம், 1,500 ரூபாய்; பண்டு சீட்டு மாதம், 1,300 ரூபாய் வீதம், கடந்தாண்டு அக்டோபர் முதல் கட்டி வந்தோம்.அந்த வகையில், அக்டோபரில், 109 கிராம் தங்க காசு; 2.50 லட்ச ரூபாய் தர வேண்டும். தங்கம் விலை உயர்ந்ததை சுட்டிக்காட்டி அவகாசம் கேட்டனர். ஆனால், சொன்னபடி தங்கம், பணம் எதுவும் தரவில்லை. இதுகுறித்து கேட்டபோது, நாங்கள் தகராறு செய்வதாக, எங்கள் மீதே போலீசில் புகார் அளித்தனர். அதனால், நாங்களும் மோசடி செய்துள்ளது குறித்து, விக்னேஷ்வரன், ஜெயந்தி ஆகியோர் மீது புகார் அளித்துள்ளோம்.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.புகார் குறித்து, திரு.வி.க.நகர் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ