உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / தி.மு.க., மவுன ஊர்வலம் போக்குவரத்து மாற்றம்

தி.மு.க., மவுன ஊர்வலம் போக்குவரத்து மாற்றம்

சென்னை,அண்ணாசாலை, ஓமந்துாரார் வளாகத்தில் உள்ள முன்னாள் முதல்வர் கருணாநிதி சிலை அருகிலிருந்து, காமராஜர் சாலையில் உள்ள கருணாநிதி நினைவிடம் வரை தி.மு.க., சார்பில் நாளை, மவுன ஊர்வலம் நடைபெற உள்ளது. போக்குவரத்து தடையின்றி செல்ல சில போக்குவரத்து ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. தேவைப்பட்டால், போர் நினைவு சின்னத்திலிருந்து - நேப்பியர் பாலம் நோக்கி வரும் வாகனங்கள், கொடி மரச்சாலை வழியாக திருப்பிவிடப்படும். காந்தி சிலையிலிருந்து - நேப்பியர் பாலம் நோக்கி வரும் வாகனங்கள், பாரதி சாலை வழியாக திருப்பிவிடப்படும். மவுன ஊர்வலம் வாலாஜா சாலைக்கு வரும் போது, வாகனங்கள், அண்ணாசாலையில் இருந்து பெரியார் சிலை நோக்கி திருப்பி விடப்படும். அதனால், காலை நேரத்தில் வாலாஜா சாலை, அண்ணாசாலை, டேம்ஸ் சாலை, பிளாக்கர்ஸ் சாலைகளில் போக்குவரத்து மெதுவாக இருக்கும். எனவே வாகன ஓட்டிகள், தங்களது பயணத்தை திட்டமிட்டு, இந்த சாலைகளை தவிர்த்து மாற்று பாதையில் செல்ல, போக்குவரத்து போலீசார் அறிவுறுத்தி உள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி