உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / திருமண ஆசை காட்டி நர்சை ஏமாற்றிய டாக்டர் கைது

திருமண ஆசை காட்டி நர்சை ஏமாற்றிய டாக்டர் கைது

திருமங்கலம், அண்ணா நகர், மேற்கு விரிவாக்கம், 12வது தெருவைச் சேர்ந்தவர் கவுதம், 29; டாக்டர். இவர், அமைந்தகரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் பணிபுரிகிறார்.அதே மருத்துவமனையில் செவிலியராக பணிபுரிந்த 26 வயது இளம்பெண்ணுடன், கவுதமுக்கு பழக்கம் ஏற்பட்டது. கவுதம், அப்பெண்ணை திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி, கர்ப்பமாக்கியதாக கூறப்படுகிறது.பின்னர், கட்டாயப்படுத்தி கருக்கலைப்பு செய்துள்ளார்.இதையடுத்து, கவுதமிடம் திருமணத்தை குறித்து பேசும்போதெல்லாம் அப்பெண்ணை மிரட்டி வந்துள்ளார்.இதுகுறித்து, திருமங்கலம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் அப்பெண் புகார் அளித்தார். போலீசாரின் விசாரணையில், கவுதம் மீதான குற்றச்சாட்டுக்கள் உறுதியானது.இதையடுத்து, அவர் மீது பெண் வன்கொடுமை தடுப்பு சட்டம் உட்பட இரண்டு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். நேற்று அவரை கைது செய்த போலீசார், சிறையில் அடைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை