உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / உள், வெளிநாட்டு விமானங்கள் தாமதம் சென்னை ஏர்போர்ட்டில் பயணியர் அவதி

உள், வெளிநாட்டு விமானங்கள் தாமதம் சென்னை ஏர்போர்ட்டில் பயணியர் அவதி

சென்னை, : சென்னையில் இருந்து உள், வெளிநாடுகளுக்கு இயக்கப்படும் விமானங்கள், நேற்று தாமதமாக புறப்பட்டதால், பயணியர் அவதியடைந்தனர். சென்னை விமான நிலையத்தில் விமானங்கள் தாமதமாவதும், காரணமின்றி ரத்து செய்யப்படும் சம்பவங்களும் அடிக்கடி நடந்து வருகின்றன. இதனால், விமான நிலையம் வந்து, பயணியர் அவதியடைவதும் தொடர்கிறது. இந்நிலையில், சென்னையில் இருந்து சிங்கப்பூர், ஹாங்காங், தாய்லாந்து, துபாய் செல்லும் விமானங்கள், நேற்று அதிகாலை முதல் ஒரு மணி நேரம் தாமத மாக புறப்பட்டு சென்றன. அதேபோல் உள்நாட்டு நகரங்களான புனே, ஹைதராபாத், துாத்துக்குடி ஆகிய இடங்களுக்கு செல்ல வேண்டிய விமானங்களும், மூன்று மணி நேரம் தாமதாக புறப்பட்டு சென்றன. வட மாநிலங்களில் நிலவி வரும் மோசமான வானிலை காரணமாக அங்கிருந்து இங்கு வர வேண்டிய விமானங்களி ன் சேவையும் பாதிக்கப் பட்டதாக, விமான நிலைய ஆணைய அதிகாரிகள் தெரிவித்தனர். சில வாரங்களாக 'டி2' புறப்பாடு முனையத்தில் சோதனைகளை முடிக்க நீண்ட நேரம் ஆவதே இந்த சிக்கலுக்கு காரணம் என கூறப்படுகிறது.

மழையால் விமான சேவை பாதிப்பு

சென்னை மற்றும் புறநகர் பகுதியில், நேற்று மாலை 6:30 மணியில் இருந்து, பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்தது. இதனால் கொச்சி, துாத்துக்குடி, மும்பை, டில்லி உட்பட பல்வேறு பகுதிகளில் இருந்து சென்னை வந்தடைந்த, 10 விமானங்கள், தரையிறங்க முடியாமல் நீண்ட நேரம் வானில் வட்டமடித்து, மழைவிட்டதும் தரை இறங்கின. சென்னை விமான நிலையத்திலிருந்து குவைத், டில்லி, கொச்சி, கோவா, மங்களூரு உட்பட 15 விமான நிலையங்களுக்கு செல்ல வேண்டிய விமானங்கள், தாமதமாக புறப்பட்டுச் சென்றன. இதனால் பயணியர் கடும் அவதிக்குள்ளாகினர். கனமழையால் வருகை, புறப்பாடு என, 25 விமான சேவைகள் பாதிக்கப்பட்டன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை