ஏழைகளுக்கு சிகிச்சை அளிக்க கண் மருத்துவமனைக்கு நன்கொடை
சென்னை, பார்வை இழப்பால் பாதிக்கப்படும் ஏழை மக்களுக்கு சிகிச்சை அளிக்கும் வகையில், டாக்டர் அகர்வால்ஸ் கண் மருத்துவமனைக்கு நன்கொடை அளிக்கப்பட்டுள்ளது.சென்னை டாக்டர் அகர்வால்ஸ் கண் மருத்துவமனை சார்பில், ஏழை மக்களுக்கு சிகிச்சை அளிக்கும் வகையில், கண் ஆராய்ச்சி மையம் செயல்பட்டு வருகிறது. இம்மையத்திற்கு, ஜெம் நிறுவன குழுமத்தின், ஜெம் ஹாலிடே ரிசார்ட்ஸ் நிறுவனம், 12.48 லட்சம் ரூபாயை நன்கொடையாக அளித்துள்ளது.இதுகுறித்து, கண் ஆராய்ச்சி மைய தலைவர் ஆதியா அகர்வால் கூறியதாவது:பொருளாதாரத்தில் பின்தங்கியவர்கள் கண் பார்வை இழப்பால் பாதிக்கப்படும்போது, அவர்களின் வாழ்க்கையை மேம்படுத்த, இம்மையம் செயலாற்றி வருகிறது. இந்த மையத்திற்கு நன்கொடை அளித்த ஜெம் ஹாலிடே ரிசார்ட்ஸ் நிறுவனத்திற்கு நன்றி. இந்த நிதி, பொருளாதார ரீதியில் பின்தங்கியவர்களுக்கு கண் சிகிச்சை அளிக்க பயன்படுத்தப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.