உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / இரட்டை நுரையீரல் மாற்று சிகிச்சை ரேலாவில் பெண்ணிற்கு மறுவாழ்வு

இரட்டை நுரையீரல் மாற்று சிகிச்சை ரேலாவில் பெண்ணிற்கு மறுவாழ்வு

குரோம்பேட்டை, இரட்டை நுரையீரல் மாற்று அறுவைச் சிகிச்சை செய்து, ரேலா மருத்துவமனை டாக்டர்கள் குழு, பெண்ணிற்கு மறு வாழ்வு அளித்துள்ளது.இதுகுறித்து, ரேலா மருத்துவமனை தலைவர் முகமது ரேலா கூறியதாவது:தேனியை சேர்ந்தவர் கவிதா, 44. இரண்டு பெண் குழந்தைகளின் தாயான அவருக்கு முடக்குவாதம், நுரையீரல் பிரச்னை இருந்தது. இரண்டு ஆண்டுகளாக படுத்த படுக்கையாக, செயற்கை சுவாசத்துடன் வாழ்ந்து வந்தார்.ஐந்து மாதங்களுக்கு முன், குரோம்பேட்டை ரேலா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பரிசோதனையில், அவருக்கு நுரையீரல் சுருக்க பிரச்சனையால் நுரையீரல் கெட்டியாகி, மூச்சுவிட சிரமப்பட்டதும், இதய பாதிப்பு இருந்ததும் தெரிய வந்தது.அப்பெண்ணுக்கு, உறுப்பு தானம் வாயிலாக பெறப்பட்டு, இரட்டை நுரையீரல் மாற்று அறுவை சிகிச்சையை, இதயம் மற்றும் நுரையீரல் மாற்று அறுவை சிகிச்சை பிரிவு இயக்குநர் ஸ்ரீநாத் விஜயசேகரன், நுரையீரல் மாற்று அறுவை சிகிச்சை பிரிவு தலைவர் ஐஸ்வர்யா ராஜ்குமார் ஆகியோர் தலைமையிலான, 30 பேர் குழு வெற்றிகரமாக செய்தது.இதன் வாயிலாக, இதய மாற்று அறுவை சிகிச்சைத் தான் ஒரே தீர்வு என்ற சூழலை, அவர் கடந்து விட்டார். ஒரே நேரத்தில் இரண்டு நுரையீரல்களையும் உறுப்பு மாற்றம் செய்து சிகிச்சையளிப்பது என்பது, அறுவை சிகிச்சை துறையில் முக்கிய நிகழ்வு. இச்சிகிச்சைக்கு, 8 மணி நேரம் ஆனது. பல வாரங்களுக்குப்பின் அவர் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பியுள்ளார். அவரால், தன்னையும், தன் மகள்களையும் தற்போது கவனித்துக்கொள்ள முடிகிறது. நுரையீரல் சிறப்பாக செயல்படுகிறது.நுரையீரல் பிரச்னையால் பாதிக்கப்பட்ட பலருக்கும், 'நுரையீரல் மாற்று அறுவை சிகிச்சை' உயிரை காக்கும் என்பது தெரிவதில்லை. இதுகுறித்த விழிப்புணர்வு தேவை. உறுப்பு தானத்தையும் ஊக்குவிப்பதன் வாயிலாக, உயர் வாழ்வதற்கான மற்றுமோர் வாய்ப்பை, நோயாளிகளுக்கு வழங்க முடியும்.இவ்வாறு, அவர் கூறினார்.***


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை