உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / இரட்டை கருப்பை குறைபாடு: 48 வயது பெண்ணுக்கு மறுவாழ்வு

இரட்டை கருப்பை குறைபாடு: 48 வயது பெண்ணுக்கு மறுவாழ்வு

சென்னை, ஜூன் 28-பெண்ணுக்கு இருந்த இரட்டை கருப்பையை நுட்பமான, 'லேப்ரோஸ்கோபி' சிகிச்சை வாயிலாக அகற்றி, எஸ்.ஆர்.எம்., குளோபல் மருத்துவமனை டாக்டர்கள் மறுவாழ்வு அளித்துள்ளனர்.மருத்துவமனையின் மகப்பேறு நலத்துறை நிபுணர்கள் பிருத்வி, சுபாஷ்ஸ்ரீ ஆகியோர் கூறியதாவது:பிறவியிலே சிலருக்கு இரட்டை கருப்பை உருவாகும் குறைபாடு ஏற்படும். இதனால், மாதவிடாயில் துவங்கி கருத்தரித்தல் வரை பல்வேறு இடர்பாடுகள் உருவாகலாம்.அப்படி ஒரு சூழலில், கடுமையான வலி மற்றும் ரத்தப்போக்கு பிரச்னையுடன், 48 வயது பெண், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பரிசோதனையில் அவருக்கு, தலா 16 செ.மீ., அளவு கொண்ட இரு கருப்பைகள் இருப்பது கண்டறியப்பட்டது. அவற்றில் அழற்சியும், நீர்க் கட்டிகளும் உருவாகியிருந்தன.இதையடுத்து, மிக நுட்பமான, 'லேப்ரோஸ்கோபி' சிகிச்சை வாயிலாக சிறு துளையிட்டு, கருப்பை சுவர்கள் அகற்றப்பட்டன. தொடர்ச்சியாக, அதனுடன் இணைந்திருந்த பகுதிகளும் ஒவ்வொன்றாக நீக்கப்பட்டன. இறுதியில் இரட்டை கருப்பை அகற்றப்பட்டது.அப்பெண்ணுக்கு, 5 விதமான அறுவை சிகிச்சைகள் மிகத் துல்லியமாக, 3 மணி நேரம் மேற்கொள்ளப்பட்டது. அதன் பயனாக பாதிப்பிலிருந்து அப்பெண் குணமடைந்து, இயல்பு நிலைக்கு திரும்பினார். சிகிச்சைக்கு பின், 48 மணி நேரத்தில் வீடு திரும்பினார்.இவ்வாறு அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை