தொழிற்பேட்டையில் ரூ.1.37 கோடியில் வடிகால்
கிண்டி, அடையாறு மண்டலம், 168வது வார்டு, கிண்டி தொழிற்பேட்டை வளாகம், அடையாறு ஆற்றை ஒட்டி உள்ளது.ஆலந்துார், பரங்கிமலை பகுதியில் இருந்து வடியும் மழைநீர், தொழிற்பேட்டை வளாகம் வழியாக ஆற்றை அடைகிறது. அடைப்பு, சிறிய வடிகால் போன்ற காரணத்தால், இப்பகுதியில் வெள்ளப் பாதிப்பு ஏற்படும்.இதை கருத்தில் கொண்டு, 1.37 கோடி ரூபாயில் வடிகால் கட்ட மாநகராட்சி முடிவு செய்துள்ளது. இங்குள்ள அருளாயன்பேட்டை பிரதான சாலை, லேபர் காலனி, காந்தி நகர் பகுதியில் உள்ள சிறிய வடிகாலை இடித்து, 4 கி.மீ., துாரத்தில் வடிகால் கட்டப்பட உள்ளது. இந்த பணி, ஜனவரி மாதம் துவங்கும் வகையில் அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.