மேலும் செய்திகள்
'பிங்க்' ஆட்டோ ஓட்டுநர் 250 மகளிருக்கு பயிற்சி
27-Jan-2025
பூந்தமல்லி, பூந்தமல்லி அரசு பேருந்து நிலையத்தில், காலியாக நின்ற ஒரு பேருந்தில், அரசு பள்ளி மாணவரும், மாணவியரும் சில்மிஷத்தில் ஈடுபட்டுள்ளனர்.இதைப் பார்த்த அரசு பேருந்து ஓட்டுநர் செல்வம், அவர்களை கண்டித்துள்ளார். இதில் கோபமடைந்த மாணவன், ஓட்டுநர் செல்வத்தை தகாத வார்த்தைகளில் பேசியதோடு, அவரை தாக்கி தப்பியுள்ளார்.இதையறிந்த அரசு பேருந்து ஓட்டுநர்கள் மற்றும் நடத்துநர்கள், நிலையத்தில் ஆங்காங்கே பேருந்தை நிறுத்தியதால் நெரிசல் ஏற்பட்டது.மேலும், தப்பிச்சென்ற பள்ளி மாணவனின் நண்பர்களை பிடித்து, பூந்தமல்லி காவல் நிலையத்தில் ஓட்டுநர்கள் ஒப்படைத்தனர். ஓட்டுநரை தாக்கிய மாணவன் குறித்து, அவரிடம் போலீசார் விசாரிக்கின்றனர்.
27-Jan-2025