உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / ஓட்டுநர், நடத்துநர் சஸ்பெண்ட்

ஓட்டுநர், நடத்துநர் சஸ்பெண்ட்

ஆவடி: நிறுத்தத்தில் பேருந்தை நிறுத்தாத ஓட்டுநர் மற்றும் நடத்துநர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர். பூந்தமல்லி பேருந்து நிலையத்தில், நேற்று முன்தினம் மாலை புறப்பட்ட தடம் எண்: '65பி' பேருந்து, அம்பத்துார் தொழிற்பேட்டைக்கு சென்று கொண்டிருந்தது. ஓட்டுநர் சிவகுமார், நடத்துநர் பாண்டுரங்கம் ஆகியோர் பணியில் இருந்தனர். வழியில், பருத்திப்பட்டு நிறுத்தத்தில் இருந்து 100 மீட்டர் தள்ளி, ஓட்டுநர் சிவகுமார் பேருந்தை நிறுத்தியுள்ளார். பேருந்திற்காக காத்திருந்த பள்ளி மற்றும் கல்லுாரி மாணவ - மாணவியர், ஓடிச்சென்று பேருந்தில் ஏறினர். இதையறிந்த, மாநகர போக்குவரத்து கழகம், ஓட்டுநர் சிவகுமார் மற்றும் நடத்துநர் பாண்டுரங்கம் ஆகியோரை, பணியிடை நீக்கம் செய்து, நேற்று மாலை உத்தரவிட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ