மேலும் செய்திகள்
லாரி மோதி ஓட்டுநர் பலி
21-Apr-2025
ஆவடி :செங்குன்றம் அடுத்த காரனோடை செங்கஞ்சேரியைச் சேர்ந்தவர் ஆறுமுகம், 44; கல் அறுக்கும் சேம்பரில் டிரைவராக பணிபுரிந்து வந்தார். நேற்று காலை, 'ஹீரோ பேஷன் ப்ரோ' பைக்கில் வண்டலுார் - மீஞ்சூர் வெளிவட்ட சாலை வழியாக செங்குன்றம் நோக்கி சென்று கொண்டிருந்தார்.ஆவடி அடுத்த வெள்ளச்சேரி அருகே சென்றபோது, சாலையோர தடுப்பு சுவரில் மோதி, சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். ஆவடி போக்குவரத்து புலனாய்வு போலீசார் உடலை மீட்டு, திருவள்ளுவர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரிக்கின்றனர்.
21-Apr-2025