உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / கிழிந்து தொங்கும் பசுமை பந்தல் விபத்து அபாயத்தில் ஓட்டுனர்கள்

கிழிந்து தொங்கும் பசுமை பந்தல் விபத்து அபாயத்தில் ஓட்டுனர்கள்

சென்னை, சென்னையின் பிரதான சாலைகளில் உள்ள சிக்னலில், மாநகராட்சி சார்பில், பசுமை பந்தல்கள் அமைக்கப்பட்டன.வெயிலின் தாக்கத்திலிருந்து வாகன ஓட்டிகளை பாதுகாக்கும் விதமாக அமைக்கப்பட்ட இப்பந்தல், வேப்பேரி பூந்தமல்லி நெடுஞ்சாலை - காந்தி இர்வீன் மேம்பாலம் சந்திப்பில் கிழிந்து தொங்குகிறது.இதனால், அவ்வழியாக செல்லும் அரசு பேருந்துகள் மட்டுமின்றி கனரக வாகன ஓட்டுனர்களுக்கும், காற்றில் ஆடும் பந்தல் மறைப்பதால் விபத்து ஏற்படும் அபாயம் நிலவுகிறது.சம்பந்தப்பட்ட மாநகராட்சி அதிகாரிகள், கிழிந்து தொங்கும் பசுமை பந்தலை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை