உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / மாணவியின் மண்டையை உடைத்த போதை ஆசாமி

மாணவியின் மண்டையை உடைத்த போதை ஆசாமி

சென்னை:வேப்பேரியில், பேருந்து நிறுத்தத்தில் நின்றிருந்த மாணவியின் மண்டையை உடைத்த போதை நபரை, போலீசார் கைது செய்தனர். சென்னை, கீழ்ப்பாக்கத்தைச் சேர்ந்தவர் மேஹல் ரத்துார், 28. இவர் லண்டனில் பிஎச்.டி., ஆராய்ச்சி பிடிப்பு படித்து வருகிறார். நேற்று முன்தினம் இரவு, அவரது தங்கையை பெங்களூரு பேருந்தில் ஏற்றி விடுவதற்காக, வேப்பேரியில் உள்ள சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகம் எதிரே நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த போதை ஆசாமி, திடீரென கீழே கிடந்த கல்லை எடுத்து வீசியதில், மேஹல் ரத்துார் மண்டை உடைந்தது. உடனே, கீழ்ப்பாக்கத்தில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு உள்ளார். வழக்குப்பதிவு செய்த எழும்பூர் போலீசார், தாக்குதலில் ஈடுபட்ட அசாம் மாநிலத்தைச் சேர்ந்த அமீர், 35, என்பவரை, நேற்று கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி