போதை ஆசாமி ஏ.டி.எம்.,மில் ரகளை
கோவிலம்பாக்கம், கோவிலம்பாக்கம் பிரதான சாலையில், சிட்டி யூனியன் வங்கி ஏ.டி.எம்., உள்ளது. நேற்று காலை, போதை தலைக்கேறிய நிலையில் தள்ளாடியபடி வந்த ஆசாமி ஒருவர், ஏ.டி.எம்., நுழைவாயிலை படுத்துக் கொண்டார். குளுகுளு வசதி இருந்ததால், ஆழ்ந்த துாக்கம் போட்டோர். பணம் எடுக்க வந்தவர்கள் எழுப்பி பார்த்தம் அவர், அசைந்து கொடுக்கவில்லை.இதனால், பொதுமக்கள் அவரை தாண்டி சென்று பணம் எடுத்து சென்றனர். சில பெண்கள் வேறு, ஏ.டி.எம்., மையத்திற்கு சென்றனர். மதியம் சற்று போதை தெளிந்ததும், அங்கிருந்து அவர், எஸ்கேப் ஆனார்.