உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை /  போதை ஊசி விபரீதம் வாலிபர் சீரியஸ்

 போதை ஊசி விபரீதம் வாலிபர் சீரியஸ்

சென்னை: சென்னை, கொடுங்கையூரைச் சேர்ந்தவர் பிரசன்ன குமார், 19. பிரசன்ன குமாருக்கு நேற்று பிறந்தநாள் என்பதால், செங்குன்றத்தைச் சேர்ந்த அவரது நண்பர்களான சஞ்சய், சரவணன் ஆகியோர், வீட்டிற்கு வந்துள்ளனர். அவர்கள் 'போதை ஊசி போட்டு பிறந்த நாளை கொண்டாடுவோம்' என, ஆசைவார்த்தை கூறியுள்ளனர். அவர்கள் வைத்திருந்த மாத்திரையை தண்ணீரில் கரைத்து ஊசி மூலம் சஞ்சய், சரவணன் ஆகியோர் உடலில் செலுத்தியதோடு, பிரசன்னகுமாரின் கையிலும் போதை ஊசி போட்டுள்ளனர். சிறிது நேரத்தில் பிரசன்ன குமாருக்கு, கை மரத்து போக ஆரம்பித்து, நெஞ்சு வலிப்பது போல் இருந்தது. இதை குடும்பத்தினரிடம் தெரிவிக்க, பதறிய அவர்கள் '108' ஆம்புலன்ஸ் மூலம், அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். சம்பவம் குறித்து, கொடுங்கையூர் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்