உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / ரூ.10 லட்சம் மதிப்புள்ள போதை பொருள் பறிமுதல்

ரூ.10 லட்சம் மதிப்புள்ள போதை பொருள் பறிமுதல்

வேளச்சேரி:வேளச்சேரி, சீனிவாசா நகர் 6வது பிரதான சாலையில், ஒரு அடுக்குமாடி குடியிருப்பு உள்ளது.இதில் உள்ள ஒரு வீட்டில் போதைப்பொருட்கள் பதுக்கப்பட்டிருப்பதாக, அக்கம் பக்கத்தினர் வேளச்சேரி தனிப்படை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.போலீசார் அங்கு சென்று ஆய்வு செய்த போது, மெத் ஆம்பெட்டமைன் போதைப்பொருள் மற்றும் போதை மாத்திரை பதுக்கி வைத்து விற்பனை செய்வது தெரிந்தது.இதையடுத்து, இதில் தொடர்புள்ள வேளச்சேரி ப்ளோரா குடியிருப்பைச் சேர்ந்த ஜித்தேஷ், 22, மணிகண்டன், 23, உள்ளிட்ட ஐந்து பேரை கைது செய்த போலீசார், அவர்களிடமிருந்து, 10 லட்சம் ரூபாய் மதிப்புள்ள போதைப் பொருட்களை பறிமுதல் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை