உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / ரூ.5 கோடி போதை பொருள் பறிமுதல்: மூன்று பேர் கைது

ரூ.5 கோடி போதை பொருள் பறிமுதல்: மூன்று பேர் கைது

முத்தியால்பேட்டை:முத்தியால்பேட்டையில் 5 கோடி ரூபாய் மதிப்பிலான போதைப்பொருளை பறிமுதல் செய்த போலீசார், மூவரை கைது செய்தனர். சென்னை, முத்தியால்பேட்டை, பிடாரியார் கோவில் தெரு மற்றும் பொன்னியம்மன் கோவில் தெரு சந்திப்பு அருகே போதைப்பொருள் தடுப்பு நுண்ணறிவுப் பிரிவு போலீசார், நேற்று வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, பைக்கில் வந்த நபர்களிடம் போலீசார் விசாரித்தனர். அவர்கள் முன்னுக்குப் பின் முரணாக பதிலளித்ததால், பையை சோதனையிட்டனர். அதில், 'சூடோஎபிட்ரின்' என்ற போதைப்பொருள் மறைத்து வைத்திருந்தது தெரியவந்தது. விசாரணையில், சூளையைச் சேர்ந்த முகமது அலி ஜின்னா, 55, திருவல்லிக்கேணியைச் சேர்ந்த சையது இப்ராஹிம், 50, என்பது தெரியவந்தது. இருவரையும் போலீசார் கைது செய்தனர். அவர்கள் கொடுத்த தகவலின்படி, இவ்வழக்கில் தொடர்புடைய முக்கிய குற்றவாளியான தண்டையார்பேட்டையைச் சேர்ந்த சேவியர் ஜேசுதாஸ், 54, என்பவரை, போலீசார் நேற்று கைது செய்தனர். அவர்களிடமிருந்து, 5 கோடி ரூபாய் மதிப்பிலான 5 கிலோ சூடோஎபிட்ரின், இரண்டு ஐபோன்கள் உட்பட நான்கு மொபைல்போன்கள் மற்றும் மூன்று பைக்குகளை போலீசார் பறிமுதல் செய்தனர். மூவரும் சிறையில் அடைக்கப்பட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை