மேலும் செய்திகள்
மீன் வியாபாரி வீட்டில் 100 சவரன் கொள்ளை
30-Nov-2024
மாதவரம்,மாதவரம், ரோஜா நகரில் போதை பொருள் வினியோகம் நடப்பதாக, நேற்று போலீசாருக்கு தகவல் வந்தது. இதையடுத்து, அங்கு போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.அப்போது, பைக்கில் வந்த நபர்கள் போலீசாரை கண்டதும் தப்பிக்க முயன்றனர். அதற்கு போலீசார் அவர்களை மடக்கி சோதனையிட்டதில், 1.5 கிலோ 'மெத் ஆம்பெட்டமைன்' போதைப் பொருள் இருந்தது கண்டறியப்பட்டது. அவற்றின் மதிப்பு 75 லட்சம் ரூபாய்.விசாரணையில், மாதவரம் ரோஜா நகரைச் சேர்ந்த வெங்கடேசன், 41, மற்றும் திருவல்லிக்கேணியைச் சேர்ந்த கார்த்திக், 36, என்பது தெரிய வந்தது. இருவரையும் கைது செய்த போலீசார், போதை பொருள் மற்றும் பைக்கை பறிமுதல் செய்து, தொடர்ந்து விசாரிக்கின்றனர்.
30-Nov-2024