உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / கடை வாசலில் போதையில் துாங்கியவர் பலி

கடை வாசலில் போதையில் துாங்கியவர் பலி

வேளச்சேரி, வேளச்சேரி, கங்கையம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் தேசிங்குராஜா, 35. பெயின்டர். மனைவி மற்றும் 6 வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளனர்.நேற்று முன்தினம் இரவு, தேசிங்குராஜா நண்பர்களுடன் மது அருந்த சென்றுள்ளார். அளவுக்கு அதிகமாக மது அருந்தியதால், வேளச்சேரி விரைவு சாலையில் உள்ள ஒரு கடை வாசலில் துாங்கியுள்ளார்.நேற்று காலை, வாயில் நுரை வெளியேறி, பலியாகி கிடந்தார். வேளச்சேரி போலீசார், உடலை கைப்பற்றி, ராயப்பேட்டை மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை