மேலும் செய்திகள்
மும்பை ஏர்போர்ட்டில் ரூ.33 கோடி கஞ்சா பறிமுதல்
12-Jul-2025
சென்னை, வெளிநாடுகளில் இருந்து சென்னைக்கு கடத்தப்பட்ட, 48 லட்சம் ரூபாய் மதிப்புள்ள இ - சிகரெட்டுகளை, சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.மலேஷியாவில் இருந்து சென்னை விமான நிலையத்திற்கு வந்த மூன்று பார்சல்கள் மீது, சுங்கத்துறை அதிகாரிகளுக்கு நேற்று முன்தினம் சந்தேகம் ஏற்பட்டது.ஒவ்வொரு பார்சலும் 29 எடையில் இருந்தது.இவற்றின் மீது துணி, ஆடைகள் மற்றும் கம்பிகள் என எழுதப்பட்டிருந்தன. அதிகாரிகள்,அவற்றை பிரித்து சோதனை செய்ததில் மொத்தம் 998 எண்ணிக்கையில் 23 லட்சம் ரூபாய் மதிப்புள்ள இ - சிகரெட்டுகள் இருந்தன. இவற்றை பறிமுதல் செய்த சுங்கத்துறை அதிகாரிகள், தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.இதேபோல், சுங்கத்துறை அதிகாரிகளுக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில், சென்னை வெளிநாட்டு அஞ்சல் நிலையத்தில் கடந்த 14ம் தேதி சோதனை நடத்தினர்.துபாயில் இருந்து சென்னை நகரின் பல்வேறு முகவரிக்கு அனுப்பப்பட்ட 10 பெட்டிகளில், ஒவ்வொன்றும் தலா 25 கிலோ எடையுடன், 25 லட்சம் ரூபாய் மதிப்பு இ - சிகரெட்டுகள் இருந்தன. இவற்றை பறிமுதல் செய்த சுங்கத்துறை அதிகாரிகள், இதுகுறித்தும் விசாரித்து வருகின்றனர்.
12-Jul-2025