மேலும் செய்திகள்
பசுமையான பழநியை உருவாக்கும் நகராட்சி
18-Nov-2024
சென்னை, சென்னையின் முக்கிய சாலையாக, இ.சி.ஆர்., உள்ளது. இதில், திருவான்மியூர் முதல் அக்கரை வரை, 10 கி.மீ., துாரம் நான்கு வழி சாலையை, ஆறு வழி சாலையாக மாற்றும் பணி, இறுதி கட்டத்தில் உள்ளது. சாலையின் மைய தடுப்பு, 1 அடி அகலத்தில் இருந்தது. விரிவாக்கத்திற்குபின், செடிகள் நடும் வகையில், 4 அடி அகலமாக மாற்றப்பட்டது. இதில், 2.5 அடி அகலம், 3 அடி ஆழத்தில், அழகும், பசுமையுமான செடிகள் நடப்படுகிறது. முதற்கட்டமாக, 800 மீட்டர் நீளத்தில் செடிகள் நடப்படுகின்றன.மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது:சாலை விரிவாக்கம் முடிந்த பகுதியில் செடிகளை நட்டு வருகிறோம். இதற்காக, வனத்துறையில் இருந்து விலை கொடுத்து வாங்கிய மரக்கன்றுகளும், மாநகராட்சி தயாரிக்கும் இயற்கை உரமும் பயன்படுத்தப்படுகிறது. பராமரிப்பு பணிகளையும் மாநகராட்சி செய்யும். மண் வளம், காலநிலைக்கு ஏற்ற, ஆக்சிஜன் அதிகமாக வெளியேற்றும் செடிகளாக நட்டு வருகிறோம். இதனால், வாகன புகையால் ஏற்படும் மாசு குறைவதுடன், பசுமை சாலையாகவும் காணப்படும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.
சாலை மைய தடுப்பு 3 அடி உயரம் கொண்டது. இதில், ஒன்றரை அடி உயரத்திற்கு, இயற்கை உரமும், 1 அடி உயரத்திற்கு செம்மண் கலந்த உரமும் போடப்படுகிறது. தண்ணீர் ஊற்றி பராமரிக்க அரை அடி விடப்பட்டுள்ளது. தற்போது, நடைபெறும் பணிக்கு, 20,000 கிலோ இயற்கை உரம், 20,000 கிலோ செம்மண் கலந்த உரம் பயன்படுத்தப்படுகிறது. இதில், ஜாட்ரோபா, புளூமெரியா புடிகா, டெகோமா ஸ்டான்ஸ் உள்ளிட்ட ஆறு வகையான, 500 செடிகள் நடப்படுகின்றன. போக்குவரத்துக்கு இடையூறு இல்லாமல் பராமரிக்கப்படும் என, மாநகராட்சி அதிகாரிகள் கூறினர்.
18-Nov-2024