உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை /  மாணவியின் அறையில் ஈ.டி., ரெய்டு

 மாணவியின் அறையில் ஈ.டி., ரெய்டு

சென்னை: தனியார் கல்லுாரி மாணவியின் அறையில், ஈ.டி., எனும் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். கேரள மாநிலத்தைச் சேர்ந்தவர் ஆஸ்லின். இவர், தாம்பரம் அடுத்த சேலையூரில் உள்ள தனியார் கல்லுாரியில் படித்து வருகிறார். கோட்டயத்தில், இவரது பெற்றோருக்கு சொந்தமான நிதி நிறுவனத்தில், சட்ட விரோத பண பரிமாற்றம் தொடர்பாக ஈ.டி., அதிகாரிகள் சோதனை நடத்தினர். அதன் அடிப்படையில், சேலையூரில் ஆஸ்லின் தங்கியிருந்த அடுக்குமாடி குடியிருப்பிலும், ஏழு பேர் கொண்ட அமலாக்கத்துறையினர், நேற்று சோதனை நடத்தினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை