மேலும் செய்திகள்
100 சதவீதம் தேர்ச்சி ஹெச்.எம்.,க்கு பாராட்டு
09-Sep-2025
சென்னை: சென்னை மாநகராட்சியில், 100 சதவீத தேர்ச்சிக்கு காரணமான, 184 ஆசிரியர்கள், நேற்று கல்வி சுற்றுலா அழைத்து செல்லப்பட்டனர். சென்னை மாநகராட்சி பள்ளிகளில், 2024- - 25ம் கல்வியாண்டில், மாணவ - மாணவியர் 100 சதவீதம் தேர்ச்சிக்கு உறுதுணையாக இருந்த, 550 ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட்டனர். இவர்களை, திருச்சி ஐ.ஐ.எம்., - என்.ஐ.ஐ.டி., மற்றும் கொடைக்கானல் இன்டர்நேஷனல் பள்ளி போன்ற கல்வி நிறுவனங்களுக்கு சுற்றுலா அழைத்து செல்ல மாநகராட்சி ஏற்பாடு செய்துள்ளது. முதற்கட்டமாக, நேற்று மாலை, 184 ஆசிரியர்கள் சுற்றுலா சென்றனர். இவர்கள் சென்ற வாகனத்தை, மேயர் பிரியா கொடியசைத்து துவக்கி வைத்தார். நிகழ்ச்சியில், கமிஷனர் குமரகுருபரன் உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்றனர். தொடர்ந்து, 8ம் தேதி, 91 பேர்; 12ம் தேதி 184 பேர்; 15ம் தேதி 91 பேர் என, மொத்தம் 550 ஆசிரியர்கள் சுற்றுலா அழைத்து செல்லப்பட உள்ளனர்.
09-Sep-2025