மேலும் செய்திகள்
ஒப்பிலானில் வீடு புகுந்து திருடிய முதியவர் கைது
02-Aug-2025
சைதாப்பேட்டை,மகளிர் விடுதி வாசலில் நின்ற மூன்று சக்கர மிதிவண்டியை திருடிய முதியவரை, அப்பகுதி மக்கள் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர். நந்தனம், மேற்கு சி.ஐ.டி., நகரை சேர்ந்தவர் திருஞானசம்பந்தம், 50. மகளிர் விடுதி நடத்தி வருகிறார். விடுதிக்கு உணவு ஏற்றிச்செல்ல, மூன்று சக்கர மிதிவண்டி வைத்துள்ளார். நேற்று அதிகாலை, ஒரு முதியவர் பூட்டை உடைத்து மிதிவண்டியை திருடி தள்ளி சென்று கொண்டிருந்தார். சத்தம் கேட்டு வந்த அப்பகுதி மக்கள், அவரை மடக்கி பிடித்து, சைதாப்பேட்டை போலீசில் ஒப்படைத்தனர். விசாரணையில், திருவான்மியூரை சேர்ந்த ஹரிதாஸ், 66, என தெரிந்தது. அவரை கைது செய்த போலீசார், கட்டிங் பிளேயர் மற்றும் உடைந்த பூட்டு ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.
02-Aug-2025