உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / குப்பை லாரி மோதி முதியவர் உயிரிழப்பு

குப்பை லாரி மோதி முதியவர் உயிரிழப்பு

கோடம்பாக்கம்:கோடம்பாக்கம், ஷ்யாமலா வந்தனா தெருவைச் சேர்ந்தவர் தியாகராஜன், 73. இவர், நேற்று முன்தினம் இரவு, விஷ்வநாதபுரம் பிரதான சாலை மற்றும் அஜீஸ் நகர் 2வது தெரு சந்திப்பு அருகே, சாலையை கடக்க முயன்றார்.அப்போது, கோடம்பாக்கம் ஐந்து விளக்கு பகுதியை நோக்கி சென்ற, சென்னை மாநகராட்சி ஒப்பந்த குப்பை லாரி, தியாகராஜன் மீது மோதியது. இதில், லாரியின் வலது புற பின் சக்கரம், தியாகராஜன் தலை மீது ஏறி இறங்கியதில், சம்பவ இடத்திலேயே பலியானார்.பாண்டி பஜார் போக்குவரத்து போலீசார், உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கே.கே., நகர் இ.எஸ்.ஐ., மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.மேலும், விபத்து ஏற்படுத்திய லாரி ஓட்டுநரான மேற்கு மாம்பலத்தைச் சேர்ந்த மணிகண்டன், 28, என்பவரை கைது செய்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை