உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / முதியவருக்கு தோள்பட்டை வலி பலுான் வைத்து ரேலா சிகிச்சை

முதியவருக்கு தோள்பட்டை வலி பலுான் வைத்து ரேலா சிகிச்சை

குரோம்பேட்டை,பலுான் பயன்படுத்தி, முதியவரின் தோள்பட்டை பிரச்னைக்கு, ரேலா மருத்துவமனை தீர்வு கண்டுள்ளது.குரோம்பேட்டை ரேலா மருத்துவமனை நிர்வாகத்தினர் கூறியதாவது:சென்னையைச் சேர்ந்த, 65 வயது முதியவருக்கு, வலது தோள்பட்டையில் பெரிய அளவில் தோள் மூட்டு தசை கிழிந்தது. தோள்பட்டை இயக்கம் குறைந்து வந்ததால், குரோம்பேட்டை ரேலா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.ஆந்த்ராஸ்கோபி மற்றும் விளையாட்டு மருத்துவப் பிரிவு அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் பிரகாஷ் அய்யாதுரை தலைமையிலான மருத்துவ குழுவினர், முதியவரை பரிசோதனை செய்தனர். பாதிப்படைந்த தசை யை மேம்படுத்துவதற்காக, முதியவருக்கு, மிக நுண்ணிய ஊடுருவலை மட்டுமே செய்யும், ஆந்த்ராஸ்கோபி சிகிச்சை செய்தனர். தொடர்ந்து, ஒரு சிறிய மருத்துவ செயல்முறையின் வாயிலாக, கையின் மேற்பகுதி எலும்புக்கும், தோள்பட்டை பகுதிக்கும் நடுவில், பலுான் வைத்தனர்.இதனால், எலும்புகள் உராய்வும் தவிர்க்கப்படுவதுடன், உடல் இயக்கம் மேம்பட்டு, மூட்டு அழுத்தமும் தவிர்க்கப்படும். இந்த தற்காலிக பலுான், தசையை வலுவாக்க உதவி செய்வதுடன், 12 மாதங்களில் படிப்படியாக மட்கிவிடும். இதுபோன்ற அறுவை சிகிச்சை, மாநிலத்தில் இதுவே முதல் முறை.இவ்வாறு அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை