உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / சிகிச்சை பெற்ற மூதாட்டி பலி கலாட்டா உறவினர்கள் கைது

சிகிச்சை பெற்ற மூதாட்டி பலி கலாட்டா உறவினர்கள் கைது

ராயபுரம், வியாசர்பாடி, சத்தியமூர்த்தி நகரைச் சேர்ந்தவர் பிலோமினா, 75. மூச்சு திணறலால், கடந்த 30ம் தேதி இரவு, ஸ்டான்லி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். நேற்று முன்தினம் பிலோமினா உயிரிழந்தார்.முறையான சிகிச்சை அளிக்காததால் பிலோமினா உயிரிழந்ததாக கூறி, அவரது மகன் அந்தோணிராஜ் மற்றும் உறவினர்கள் தகராறு செய்தனர்.மருத்துவமனை வளாகத்தில் உள்ள கதவு, ஜன்னல்கள் கண்ணாடிகளை நொறுக்கினர்.வண்ணாரப்பேட்டை சிறப்பு எஸ்.ஐ., அசோக்குமார் சமாதானம் பேச முயன்றார்.அப்போது மூதாட்டியின் உறவினர்கள் தாக்கியதில், அசோக்குமார் பலத்த காயமடைந்தார். ஸ்டான்லி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து விசாரித்த போலீசார், பிலோமினாவின் மகனான வியாசர்பாடி, சத்தியமூர்த்தி நகரைச் சேர்ந்த அந்தோணிராஜ், 42, மற்றும் உறவினர்களான பிரான்சிஸ், 35, திலீப்குமார், 19, கிேஷார், 21, ஆகியோரை கைது செய்து, நேற்று சிறையில் அடைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ